அண்மையில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட நாவலப்பிட்டி பிரதேசத்தில் நிலையான வருமானம் மற்றும் நீண்ட கால சுய வேலைவாய்ப்பு உதவிகளை ஆதரிக்க பாதிக்கப்பட்ட ஒன்பது பேருக்கு முஸ்லிம் கலாச்சாரம் மற்றும் வளர்ச்சிக்கான அறக்கட்டளையினால் (MFCD) உதவிகள் வழங்கி வைக்கப்பட்டது.
அதற்கமைய வெல்டிங் ஆலை, சமையல் உபகரணங்கள், கிரைண்டர் மற்றும் வாசனை திரவியங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
நாவலப்பிட்டி பிரதேசம் பெருமளவில் வெள்ளத்தில் மூழ்கியதுடன் வீதிகள் கூட கிட்டத்தட்ட ஆறுகளாக மாறியது வரலாற்றில் இதுவே முதல் தடவையாகும்.
இதனால் அங்குள்ள மக்கள் இழந்த வீடுகளை புனரமைப்பது உட்பட மிகவும் அவநம்பிக்கையான பல குடும்பங்களின் வாழ்க்கை சீர்குலைந்துள்ள நிலையிலேயே MFCD அமைப்பு தேவையான உதவிகளை வழங்கிவைத்தது.
இந்நிகழ்வில் கண்டி அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர் நந்தன தேவப்பிரிய, உதவிப் பணிப்பாளர் திட்டமிடல் திருமதி ஜி சித்தாரா மாதவி, பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஷகீலா செவ்மினி ஆனந்த, பஸ்பகே கோரலே மற்றும் அமைப்பின் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.