19ம் திகதியை தேசிய விடுமுறை நாளாக அறிவித்த கனடா!

Date:

இங்கிலாந்தின் மகாராணியார் இரண்டாம் எலிசபெத் அவர்களின் மரண இறுதிச் சடங்கு எதிர்வரும் 19ம் திகதி நடைபெறவுள்ளது.

இதனால் செப்ரெம்பர் 19ம் திகதியை தேசிய விடுமுறை நாளாகவும், அந்த நாளில் மகாராணியாரின் பூதவுடல் அடக்கம் செய்யப்படும் நேரமான நண்பகல் 1 மணியை தேசிய துக்க நேரமாகவும் அறிவித்திருக்கின்றார் கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ரூடோ.

கனடா பிரித்தானியாவின் அரச ஆட்சிக்குட்பட்ட ஒரு நாடு என்பதுடன் 45% மாநிலங்கள் நேரடியாக மகாராணியாரின் கட்டுப்பாட்டில் இருந்து வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன் மறைந்த மகாராணியார் இரண்டாம் எலிசபெத் தன்னுடைய 70 வருட அரச பணியில் சுமார் 22 தடவைகள் கனடாவிற்கு பயணம் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது கனடாவை சுதந்திர நாடாகவும், பிரித்தானியாவின் ஆளுகையில் இருந்து விடுவிக்கும் படியும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றமையும் ஐனநாயக உரிமையுள்ள ஜனாதிபதி ஆளுகையுள்ள ஒரு நாடாக கனடாவை மாற்றும் படி வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நீர்ப்பாசனத் திணைக்களம் பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு!

நீர்ப்பாசனத் திணைக்களத்தால் விசேட அறிவிப்பொன்று பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது. நிலவும் அனர்த்த சூழ்நிலைகளைக் குறைக்க மற்றும்...

உலர் உணவுப் பொருட்களை வழங்கிய பிறீமா குழுமம்

பிறீமா குழுமம் (Prima Group Sri Lanka) ஆனது, அண்மையில் நாட்டில்...

இன்று பல தடவைகள் மழை பெய்யும்!

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் இன்று...

முற்றாக சேதமடைந்துள்ள/மீள்குடியேற முடியாத நிலையில் உள்ள வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள்

2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மீதான குழுநிலை விவாதம் நாடாளுமன்றத்தில்...