‘அரசாங்கத்துக்கு எதிராக நவம்பர் 2 வீதிக்கு இறங்குவோம்’

Date:

அரசாங்கம் மற்றும் பாதுகாப்பு தரப்பினரின் அடக்குமுறைக்கு எதிராக எதிர்வரும் நவம்பர் மாதம் 2 ஆம் திகதி அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்து பாரிய போராட்டமொன்றை நடத்த திட்டமிட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

சிங்கள உடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதற்காக அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், வெகுஜன அமைப்புகள், மாணவர் சங்கங்கள், ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முன்னணி சோசலிசக் கட்சி உள்ளிட்ட சிவில் ஆர்வலர்கள் ஒன்றிணைவார்கள் என்றும் அவர் கூறினார்.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை இல்லாதொழிக்க வேண்டும், ஆர்ப்பாட்டம் நடத்தும் உரிமைக்கு இடையூறு விளைவிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அரசியலமைப்புச் சட்டம் கருத்துச் சுதந்திரத்தையும் பேச்சுச் சுதந்திரத்தையும் உறுதிப்படுத்தினாலும், நூறு ஆண்டுகளுக்கும் மேலான பொலிஸ் கட்டளைச் சட்டத்தைப் பயன்படுத்தி போராட்டம் நடத்தும் உரிமையை நசுக்குவதை அனுமதிக்க முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

Popular

More like this
Related

சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்தார் முன்னாள் அமைச்சர் விமல்.

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூர்யவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச...

சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை

சீன வெளிவிவகார அமைச்சர் வொன்க் ஈ இலங்கைக்கு ஒரு நாள் விஜயமாக...

புத்தளம் – கொழும்பு வீதியில் கோர விபத்து : மூவர் உயிரிழப்பு!

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் முந்தலம் – நவதன்குளம்  பகுதியில் இன்று...

நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் மழை

நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் இன்றைய தினம் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...