இந்தியப் பல்கலைக்கழகங்களின் பட்டதாரிகளையும் பட்டதாரி நியமனங்களில் உள்வாங்குவதற்கு தீர்மானம்!

Date:

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட இந்தியப் பல்கலைக்கழகங்களின் பட்டதாரிகளையும் பட்டதாரி நியமனங்களில் உள்வாங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக நேற்று(27) பிரதமர் தினேஸ் குணவர்த்தன மற்றும் கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜெயந்த ஆகியோருடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் பிரஸ்தாபிக்கப்பட்ட நிலையில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த கால யுத்த அனர்த்தம் காரணமாக இடம்பெயர்ந்து இந்தியாவில் தங்கியிருந்த காலப் பகுதியில், இந்தியப் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்று பட்டதாரிகளானவர்கள், யுத்தம் நிறைவடைந்த பின்னர் தங்களின் சொந்த இடங்களுக்கு திரும்பியுள்ளனர்.

அவ்வாறானவர்கள், அண்மைய காலங்களில் மேற்கொள்ளப்பட்ட அரச சேவைக்கான பட்டதாரிகள் ஆட்சேர்ப்புக்களின் போது, வெளிநாட்டு பட்டதாரிகள் என்ற அடிப்படையில் நிராகரிக்கப்பட்டிருந்தனர்.

இதுதொடர்பாக பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் ஆகியோருடன் பிரஸ்தாபித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படுகின்ற பட்டதாரிகள் நியமனத்தின் போது, வெளிநாட்டு பட்டதாரிகள் என்ற காரணத்தினால் பாதிக்கப்பட்ட குறித்த பட்டதாரிகளும் உள்வாங்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுத்தினார்.

இந்நிலையில், இலங்கை பல்கலைக்கழக மானியங்களினால் அங்கீகரிக்கப்பட்ட பட்டதாரிகளை அரச சேவையில் உள்ளீர்ப்பதற்கு பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் ஆகியோரினால் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மத்திய பேருந்து நிலையத்திற்குச் சேதம் விளைவிப்போர் மீது கடும் நடவடிக்கை

புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தைச் சேதப்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்...

நாட்டில் நிலவும் கடும் வெப்பம்: புத்தாண்டு விளையாட்டு விழாக்களுக்கு சுகாதார எச்சரிக்கை!

நாட்டில் தற்போது நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக, புத்தாண்டு விளையாட்டு...

பாடசாலைகளுக்கான முதலாம் தவணை நிறைவு!

அரச மற்றும் அரச அனுமதியின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கான முதலாம்...

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டும் நோக்கில் பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சு.

ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் நாடுகளுக்கு இடையேயான பதற்றத்தைத் தணித்து, மத்திய கிழக்கு...