இலங்கைக்கே உரித்தான அரிய வகை அரணை இனம் ஒன்று கண்டுபிடிப்பு!

Date:

வவுனியா ஓமந்தை, அரச வீட்டுத் திட்ட பகுதியில் இலங்கைக்கே உரித்தான அரிய வகை அரணை இனம் ஒன்று அவதானிக்கப்பட்டுள்ளது.

ஓமந்தை அரச வீட்டுத் திட்டப் பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றுக்கு இன்று  சென்ற ஒருவர் “தாசியா ஹாலியானஸ்” என்ற இலங்கைக்கே உரித்தான அரியவகை அரணை இனம் ஒன்றை அவதானித்து புகைப்படம் எடுத்துள்ளார்.

இதேவேளை 1970 ஆம் ஆண்டுகளில் வெளி வந்த இலங்கையின் இரண்டு ரூபாய் நாணயத்தாளில் இதன் படம் அரசாங்கத்தால் பொறிக்கப்பட்டு இருந்ததுடன், முத்திரை ஒன்றிலும் இதன் படம் பொறிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை கடந்த 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாத இறுதிக் காலப்பகுதியில் ஓமந்தைக் காட்டுப் பகுதியில் இதே போன்ற அரணை இனம் ஒன்று அவதானிக்கப்பட்டு இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

குணமடைந்த 22 ஈரானிய மாலுமிகள் கொக்கல முகாமிற்கு!

தாக்குதலுக்குள்ளான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை...

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...