இலங்கை கல்வி சீர்திருத்தங்களுக்கு தமது அரசாங்கம் பூரண ஆதரவு வழங்கும்: பெலாரஸ் கல்வி அமைச்சர்

Date:

இலங்கையின் கல்வி சீர்திருத்தங்களுக்கு தமது அரசாங்கம் பூரண ஆதரவை வழங்கும் என பெலாரஸ் நாட்டின் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.

பெலாரஸ் நாட்டுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுடன் நடத்திய கலந்துரையாடலின் போதே இந்தத் தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இச்சந்திப்பின் போது அமைச்சர் பிரேமஜயந்த பெலாரஷ்ய கல்வி அமைச்சர் அன்ட்ரே இவானெட்ஸிடம், இலங்கையிலிருந்து அதிகளவான இளைஞர்கள் பெலாரஸ் பல்கலைக்கழகங்களுக்குள் நுழைந்து உயர்கல்வியை தொடர்வதாக தெரிவித்தார்.

சமகால கல்வி முறைகளுக்கு ஏற்றவாறு இலங்கையில் பாடசாலை மற்றும் பல்கலைக்கழக பாடத்திட்டங்களை மேம்படுத்துவது தொடர்பான உண்மைகளை அமைச்சர் பிரேமஜயந்த விளக்கினார்.

பெலாரஸ் நாட்டில் அதிகளவான இலங்கை மருத்துவ மாணவர்கள் கல்வி பயின்று வருவதாகவும் கல்வித்துறை நினைவூட்டியதுடன், இம்மாணவர்களின் எதிர்கால நலன் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இதேவேளை, பெலாரஸ் மற்றும் இலங்கை கல்வி அமைச்சுக்களுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது தொடர்பான வரைபு குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

Popular

More like this
Related

இலங்கையிலுள்ள தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு!

இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட...

கடந்த கால அனுபவங்களால் மக்கள் அச்சப்படுவது இயல்பானது: அரசிடம் முறையான தீர்வு உண்டு.:நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி விசேட உரை!

இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது மத்தியகிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக ஜனாதிபதி...

இலங்கையர்களுக்காக விசேட அவசர அழைப்பு எண்கள் அறிமுகம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தினால் அங்குள்ள சுமார் 10 இலட்சம்...

ஈரான் ஆன்மீகத் தலைவரின் மறைவு: அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் இரங்கல்

ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லா அலி கமேனி மறைவு குறித்து, அகில...