நாடளாவிய ரீதியாக உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் 25ஆம் திகதி விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.
அதற்கு பதிலாக ஒக்டோபர் 29ஆம் திகதி பாடசாலை நடத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
செவ்வாய்க்கிழமை மாணவர்களின் வரவில் வீழ்ச்சி காணப்படும் என்பதை கருத்திற் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.