புத்தளம் அல்மத்ரஸதுல் இஸ்லாமிய்யா மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!

Date:

புத்தளம் அல்மத்ரஸதுல் இஸ்லாமிய்யா ஷரிஆ பிரிவு 2019, 2020, 2021 ஆகிய வருடங்களில் கற்கைநெறிகளை பூர்த்தி செய்து வெளியேறிய மாணவிகளுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம்  மத்ரஸா கேட்போர் கூடத்தில்  இடம்பெற்றது.

அதிபர் அஷ்ஷெய்க் எம்.எம் ஜுனைதீன் தலைமையில்  இடம்பெற்ற இந்நிகழ்வில் சிறப்பு பேச்சாளராக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா புத்தளம் கிளையின் தலைவர் அஷ்ஷெய்க் எச்.எம் மின்ஹாஜ் (இஸ்லாஹி) அவர்கள் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.

அத்தோடு அல் மத்ரஸத்துல் இஸ்லாமிய்யாவின் முன்னாள் அதிபர் சகோதரர் எம்.எச் அப்துல் ரஷீத் அவர்களும் நிர்வாக குழு உறுப்பினர்களான அஷ்ஷெய்க் எம்.எச் ஹனஸ் முஹியுத்தீன் அஷ்ஷெய்க் A.O அப்துல் கஹ்ஹார் அஷ்ஷெய்க் M.R.M இர்பான் அவர்களும் மத்ரஸாவின் உப அதிபர் அஷ்ஷெய்க் M.S.M நஸ்ருதீன் மற்றும் ஷரீஆ பகுதி முஅல்லிமாக கடமையாற்றும் அஷ்ஷெய்க் S.H.ஸல்மான் பாரிஸ் கலந்துகொண்டு மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

இந்நிகழ்வை அஷ்ஷெய்க் A.R.M முபாஸ் அவர்கள் தொகுத்து வழங்கினார்.

இறுதியாக மத்ரஸா முஅல்லிமாவாக கடமையாற்றும் மௌலவியா உம்மு அதிய்யா அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.

Popular

More like this
Related

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர கைது!

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இரு குழுக்களுக்கு...

உண்மை முழுமையாக வெளிப்படும் வரை நீதிக்கான எமது போராட்டம் ஓயாது: கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள்,...

‘அமைதி பாதயாத்திரைக்கு ஆதரவளிப்பது கௌரவம்’: ஜனாதிபதி

இன்று (21) ஆரம்பமாகும் ‘அமைதி பாதயாத்திரைக்கு ‘ தனது முழுமையான ஆதரவை...

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் இடம்பெற்று 7ஆண்டுகள் நிறைவு

கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும்...