இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு உலகெங்கிலும் பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு நடந்து வருகின்ற நிலையில்,
இலங்கையிலும் பல பகுதிகளிலும் இதனை முஸ்லிம்களும் முஸ்லிம் அல்லாதோர்களும் பரந்த பட்டத்தில் செய்து வருகின்றனர்.
அதற்கமைய நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் , முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கொழும்பிலுள்ள அவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் கடந்த 18 ஆம் திகதி இடம்பெற்றது.
இந்நிகழ்வில், முன்னாள் ஜனாதிபதி அவரது மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி உள்ளிட்ட உள்ளூர் பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
மேலும் இந்த நிகழ்வுக்கு வெளிநாட்டுத் தூதுவர்கள், ராஜதந்திரிகள், உட்பட , முஸ்லிம் திணைக்கள பணிப்பாளர் இப்ராஹிம் அன்சார்,அஸ்ஸெய்யித்.ஹஸன் மௌலானா இன்னும் பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
அரசியல் களம் தள்ளாடிக் கொண்டிருக்கும் சூழலில், மீலாத் போன்ற சந்தர்ப்பங்களும் நமது நாட்டு அரசியல்வாதிகளுக்கு களமாக,தளமாக மாறி வருவது அவதானிக்கக் தக்கதாகும்.