மைத்திரிபால, தயாசிறி ஆகியோருக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

Date:

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன மற்றும் அக்கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர ஆகியோரை எதிர்வரும் 19ஆம் திகதியன்று நீதிமன்றத்தில் முன்னிலையாவதற்கான நோட்டீஸ் பிறப்பிக்குமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம், இன்று (13) உத்தரவிட்டது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பதவிகளில் இருந்து தன்னை நீக்கியமையை சவாலுக்கு உட்படுத்தி துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தாக்கல் செய்த மனு தொடர்பில் விளக்கமளிப்பதற்கே இருவருக்கும் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு செப்டம்பரில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவின் தீர்மானத்திற்கு எதிராக செயற்பட்டதால், தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொண்ட கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களை கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்குவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்தது.

இதன்படி, நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, லசந்த அழகியவண்ண, ரஞ்சித் சியம்பலாபிட்டிய, ஜகத் புஷ்பகுமார மற்றும் சாமர சம்பத் தசநாயக்க ஆகியோர் கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கப்பட்டதுடன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு உறுப்புரிமையும் பறிக்கப்பட்டது.

Popular

More like this
Related

திரைப்படத் துறையில் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு ஜனாதிபதியினால் தீர்வு

சினிமாவின் முன்னேற்றம் நாட்டு மக்களின் ஆன்மீக வளர்ச்சியில் தாக்கம் செலுத்துகிறது என்றும்,...

பெண்களுக்கு எதிரான டிஜிட்டல் வன்முறையை எதிர்த்துப் போராட ‘அவளுக்கான வாக்குறுதி’ பிரசாரத்தை ஆரம்பித்த Inglish Razor.

2025 நவம்பர் 25: பெண்களுக்கு எதிரான வன்முறையை இல்லாதொழிப்பதற்கான சர்வதேச தினத்தை...

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்தல்.

நாட்டின் இரண்டு பகுதிகளின் மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்து மண்சரிவு சிவப்பு...

நாட்டில் வேலையின்றி இருக்கும் 365,951 பேர்: பிரதமர் தகவல்!

நாட்டில் தற்சமயம் 365,951 பேர் வேலையின்றி இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய...