பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் (IUSF) ஏற்பாடு செய்திருந்த போராட்டம் களனி பல்கலைக்கழகத்தில் இருந்து கொழும்பு நோக்கி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி கொழும்பு-கண்டி வீதியில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
களனி பல்கலைக்கழகத்தின் முன்னால் உள்ள பிரதான வீதியின் போக்குவரத்து நடவடிக்கை காரணமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக அப்பகுதியில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதால், சாரதிகள் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.