சிறுவர்களை போராட்டங்களுக்கு அழைத்துச் செல்வது சட்டப்படி குற்றமாகும்: ஜனாதிபதி

Date:

நாட்டின் சட்டத்தின் படி சிறுவர்களை கேடயமாக அணிவகுப்புகளுக்கு அழைத்துச் செல்வது பாரிய குற்றமாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சிறுவர் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் சிறுவர்களின் மனித உரிமைகளைப் பாதுகாத்தல் தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (12) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.

சிறுவர்களை அணிவகுப்புகளுக்கு அழைத்துச் செல்வதைத் தடுப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

சிறுவர்களைப் பாதுகாக்கும் பொறுப்புகளை இலங்கை காவல்துறை மற்றும் சிறுவர் உரிமைகள் பாதுகாப்பு நிறுவனங்களிடம் ஒப்படைக்கவும் ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தார்.

குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் உடல், மன, தார்மீக, மத மற்றும் சமூக ரீதியில் முழுமையான வளர்ச்சியை உறுதி செய்வதற்கும், சுரண்டல் மற்றும் பாகுபாட்டிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதற்கும் அரசு சிறப்பு முயற்சிகளை மேற்கொள்ளும். அரசியலமைப்பின் 27 வது பிரிவின் துணைப்பிரிவு 13 இன் கீழ் உள்ள உண்மைகளை நினைவுபடுத்தும் ஒரு அரசாங்கத்தின் பொறுப்பு.

சிறுவர்களை பாலியல் ரீதியில் பாவிப்பதில் இருந்து சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சட்டமா அதிபருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

மேலும் சட்டவிரோதமான முறையில் இந்தியாவிற்கு குடிபெயர்ந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களில் உள்ள சிறுவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அவதானம் செலுத்திய ஜனாதிபதி, அவர்களின் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டு, அதனை உடனடியாக சரிசெய்து பிள்ளைகளை பெற்றோரிடம் சேர்க்குமாறு உத்தரவிட்டார்.

சிறுவர் இல்லங்களிலுள்ள சிறுவர்களின் கல்வி மற்றும் அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பில் ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தியுள்ளதுடன், சிறுவர் இல்லங்களில் உள்ள விசேட தேவையுடைய சிறுவர்களை இனங்கண்டு அது தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறுவர் இல்லங்களுக்கு பொறுப்பான பாதுகாவலர்களுக்கு முறையான பயிற்சிகள் வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இதன் மூலம் இச்சிறுவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தவிர்க்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...