கனமழை காரணமாக நீர்வீழ்ச்சிகள், ஏரிகள், ஆறுகள் மற்றும் கடற்கரைகளுக்கு அருகில் குளிப்பதை தவிர்க்குமாறு பொதுமக்களை பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை விடுத்து இதனைத் தெரிவித்துள்ளது.
நீர்மட்டம் திடீரென உயரும் வாய்ப்புள்ளதால், ஆறுகள் மற்றும் நதிகளில் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களும், பல்வேறு பயணங்களில் ஈடுபடும் மக்களும் அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீர்வீழ்ச்சிகள், ஏரிகள், ஆறுகள் மற்றும் கடற்கரைகளுக்கு அருகில் பணியில் இருக்கும் உயிர்காக்கும் காவலர்கள் மற்றும் சமூக காவல்துறை அதிகாரிகளின் அறிவுறுத்தல்களின்படி செயல்படுதல்.
பொதுமக்கள் அந்த இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்புகளை அவதானித்துக் கொள்ளுமாறும், அந்த இடங்களில் மது அருந்துவதையும் குளிப்பதையும் முடிந்தவரை தவிர்க்குமாறும், குறிப்பாக சிறு குழந்தைகளை அவ்விடங்களுக்கு அனுப்புவதைத் தவிர்க்குமாறும் இலங்கை பொலிஸ் மேலும் கேட்டுக் கொள்கிறது.