புத்தளம் அல்மத்ரஸதுல் இஸ்லாமிய்யா ஷரிஆ பிரிவு 2019, 2020, 2021 ஆகிய வருடங்களில் கற்கைநெறிகளை பூர்த்தி செய்து வெளியேறிய மாணவிகளுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம் மத்ரஸா கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
அதிபர் அஷ்ஷெய்க் எம்.எம் ஜுனைதீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிறப்பு பேச்சாளராக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா புத்தளம் கிளையின் தலைவர் அஷ்ஷெய்க் எச்.எம் மின்ஹாஜ் (இஸ்லாஹி) அவர்கள் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.
அத்தோடு அல் மத்ரஸத்துல் இஸ்லாமிய்யாவின் முன்னாள் அதிபர் சகோதரர் எம்.எச் அப்துல் ரஷீத் அவர்களும் நிர்வாக குழு உறுப்பினர்களான அஷ்ஷெய்க் எம்.எச் ஹனஸ் முஹியுத்தீன் அஷ்ஷெய்க் A.O அப்துல் கஹ்ஹார் அஷ்ஷெய்க் M.R.M இர்பான் அவர்களும் மத்ரஸாவின் உப அதிபர் அஷ்ஷெய்க் M.S.M நஸ்ருதீன் மற்றும் ஷரீஆ பகுதி முஅல்லிமாக கடமையாற்றும் அஷ்ஷெய்க் S.H.ஸல்மான் பாரிஸ் கலந்துகொண்டு மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
இந்நிகழ்வை அஷ்ஷெய்க் A.R.M முபாஸ் அவர்கள் தொகுத்து வழங்கினார்.
இறுதியாக மத்ரஸா முஅல்லிமாவாக கடமையாற்றும் மௌலவியா உம்மு அதிய்யா அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.