நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பெட்ரோலியப் பொருட்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) (திருத்தம்) சட்டம் அக்டோபர் 26 முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கூறுகிறார்.
அமைச்சர் காஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் பதிவில் இதனைத் தெரிவித்துள்ளார்.
பெட்ரோலியப் பொருட்களை விற்க புதிய சில்லறை விற்பனையாளர்கள் ஆண்டு இறுதிக்குள் உள்ளூர் சந்தையில் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.
மேற்படி சட்டத்தின் பிரிவு 1 இன் உப பிரிவு (2) இல் அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.