மாணவர்களிடமோ, பெற்றோரிடமோ பணம் வசூலிக்க முடியாது: கல்வி அமைச்சு

Date:

கல்வி மற்றும் மாகாணக் கல்வி அமைச்சுக்களால் அந்தந்த பாடசாலைகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட பாடசாலைக் கட்டணங்களைத் தவிர்த்து சிறுவர், ஆசிரியர் தினங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்காக பாடசாலை மாணவர்களிடமோ அல்லது பெற்றோரிடமோ பணம் அறவிடக் கூடாது என கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளில் முறைசாரா முறையில் பணம் அறவிடப்படுவதைத் தடுக்கும் வகையில் 2015/5ஆம் ஆண்டு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதேநேரம், கடுமையான நிதி நெருக்கடிகளுக்கு மத்தியில் பிள்ளைகளின் கல்விக்காக பெற்றோர்கள் திண்டாடுவதால், இவ்வாறான பணச் செலவுகளை தடுத்து நிறுத்துவது அதிபர்களின் பொறுப்பு எனவும் கல்விச் செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை அண்மையில் ஆசிரியர் பாராட்டு விழாவிற்கு பணம் கோரி ஹட்டன், கொட்டகலை போகஹவத்த பிரதேச பாடசாலை மாணவி, அதிபரின் துடைப்பக் கைப்பிடியால் தாக்கப்பட்டதில் படுகாயமடைந்த சம்பவமொன்று இடம்பெற்றிருந்து.

ஆசிரியர் பாராட்டு விழாவிற்கு பாடசாலையில் கல்வி கற்கும் தனது சகோதரனுக்கு 300 ரூபா வழங்கவில்லை என அதிபர் சகோதரனை கடுமையான வார்த்தைகளால் திட்டியதாகவும்  தனது குடும்பத்தில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக  தனது தாய் வீட்டு வேலைக்காக வெளிநாடு சென்றுள்ளதாகவும் படுகாயமடைந்த  மாணவி தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...