முதல் பொது நிகழ்வாக தெற்காசிய சமூகத்தினரை சந்திக்கவுள்ள மன்னர் சார்ல்ஸ்!

Date:

மன்னர் சார்ல்ஸ் தனது முதல் பொது நிகழ்வாக பிரித்தானியாவை தளமாகக் கொண்ட இலங்கை சமூகத்தை சந்திக்க உள்ளார்.

மன்னர் சார்ல்ஸின் பதவியேற்பின் பின்னர், இங்கிலாந்து முழுவதும் வாழும் தெற்காசிய சமூகத்தினருக்கு ஸ்கொட்லாந்தில் உள்ள எடின்பர்க்கில் வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.

இதன்போது இலங்கை உட்பட பல தெற்காசிய நாடுகளுடன் தொடர்புள்ளவர்கள் ஒன்றிணைவார்கள்.

இந்தநிகழ்வில் இங்கிலாந்து முழுவதிலுமிருந்து பிரித்தானியாவை தளமாகக் கொண்ட இந்திய, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, நேபாளம், பூட்டான் மற்றும் மாலைத்தீவு பாரம்பரியத்தைச் சேர்ந்த 200-300 விருந்தினர்கள் பங்கேற்பார்கள் என பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தேசிய சுகாதார சேவை முதல் கலை, ஊடகம், கல்வி, வணிகம் மற்றும் ஆயுதப் படைகள் வரை பிரித்தானிய வாழ்க்கையில் இந்த சமூகங்கள் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிப்பதே இந்த நிகழ்வின் நோக்கமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...