45 நாட்களில் பதவியை இராஜினாமா செய்த லிஸ் ட்ரஸ்: இங்கிலாந்தின் அடுத்த பிரமதர் யார்?

Date:

இங்கிலாந்தில் பிரதமராக பொறுப்பேற்ற, லிஸ் ட்ரஸ் கொண்டுவந்த பொருளாதார திட்டங்கள், பொருளாதாரத்தை கடும் வீழ்ச்சியடைய செய்தது.

சந்தைகளில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திய இந்த திட்டங்கள், அவருடைய கன்சர்வேடிவ் கட்சியிலும் பிளவை உண்டாக்கியது.

தொடர்ந்து, பிரதமர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என கன்சர்வேடிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலானோர் போர்க்கொடி உயர்த்தினர்.

இந்நிலையில், தான் பதவியேற்ற 45ஆவது நாளில் பிரதமர் பதவியை இராஜினாமா செய்வதாக லிஸ் ட்ரஸ் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,

“கன்சர்வேடிவ் கட்சியால் நான் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, கொடுத்த வாக்குறுதியை என்னால் வழங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது என்பதை ஒத்துக்கொள்கிறேன்.

எனவே, கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் பதவியை இராஜினாமா செய்வதாக, அரசரிடம் தெரிவித்துள்ளேன். வேறொரு நபரை தேர்ந்தெடுக்கும் வரை பிரதமர் பதவியில் தொடர்வேன்” என்றார்.

மேலும், அடுத்த வாரத்திற்குள் எம்பிக்கள் புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும் கூறினார். இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக், முன்னாள் பிரமதர் போரிஸ் ஜான்சன், பென்னி மோர்டான்ட் ஆகியோர் அடுத்த பிரதமராக தேர்வாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக,”தான் எதற்கும் போராடுபவர், எதையும் விட்டு ஓட மாட்டேன். முன் நின்று போராடதான் நான் தேர்வு செய்யப்பட்டேன். கடுமையான முடிவுகளை எடுக்கவும் நான் தயாராகியுள்ளேன்” என நேற்றுதான், பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வாய்ப்பில்லை என்று லிஸ் ட்ரஸ் பேசியிருந்தார்.

இருப்பினும், அடுத்த 24 மணிநேரத்திற்குள் தனது முடிவை மாற்றி அவர் தனது இராஜினாமாவை அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

லிஸ் ட்ரஸ் அரசின் நிதி அமைச்சர் குவாசி குவார்டெங், அறிவித்த மினி-பட்ஜெட்டில் இடம்பெற்றிருந்த குழப்பம் வாய்ந்த பிரீமியர்ஷிப் திட்டம் பொருளாராத்தில் பெரும் சேதாரத்தை விளைவித்துள்ளதாக கூறப்படுகிறது.

அத்திட்டம் குறித்த அறிவிப்பால் மட்டும், அமெரிக்க டாலருக்கு நிகரான அந்நாட்டின் பவுண்டு கடுமையான சரிவை சந்தித்தாக கூறப்படுகிறது.

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...

கம்பஹாவின் பல பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (14) 10 மணி நேர...