காயம் காரணமாக T20 உலகக் கிண்ணப் போட்டியில் இருந்து விலகிய துஷ்மந்த சமீரவுக்குப் பதிலாக வேகப்பந்து வீச்சாளர் கசுன் ரஜித் இடம்பெறுவார் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை ஐக்கிய அரபு எமிரேட்ஸுடனான இரண்டாவது போட்டியின் போது சமீர காயத்துடன் தரையில் தத்தளித்துக் கொண்டிருந்தார்.
பின்னர் முழு போட்டியிலிருந்தும் வெளியேற்றப்பட்டார்.
வேகப்பந்து வீச்சாளர் அசித்த பெர்னாண்டோ மேலதிக வீரராக பெயரிடப்பட்ட நிலையில், ரஜித் அவுஸ்திரேலியாவுக்காக பயணிக்கவுள்ளார்.