பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் ஜனாதிபதியின் கருத்து!

Date:

குறித்த காலத்திற்கு முன்னர் பாராளுமன்றம் கலைக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆளும் கட்சி உறுப்பினர்கள் கூட்டத்தில் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே, இரண்டரை வருடங்களின் பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்படுமா என எழுப்பப்பட்ட கேள்விக்கு கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு நேற்று (17) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது.

இதனிடையே, 22 திருத்தத்திற்கு பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மை எதிர்ப்பு என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

எனவே 22ஆவது திருத்தத்தை நிறைவேற்றினால் பொதுஜன பெரமுனவில் உள்ள அனைவரின் ஆதரவையும் பெற முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை 22 ஆவது திருத்தம் காலத்தின் தேவை என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

அதனை ஏற்று நடத்துவதற்கு அனைவரது ஆதரவையும் எதிர்பார்க்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தைப் பேணுவதில் முன்மாதிரியாகத் திகழும் புத்தளம்.

நேற்று நடைபெற்ற அருட்தந்தை திலங்க அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு! புத்தளம் மாவட்ட சர்வ...

இரண்டு அமெரிக்கப் போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய ஈரான்!

ஈரான் மற்றும் வளைகுடா வான் பரப்பில் இரண்டு அமெரிக்கப் போர் விமானங்கள்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யக்கூடும்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர்...

காசாவில் மீண்டும் உயிர்பெற்ற பல்கலைக்கழகக் கல்வி: நீண்ட இடைவேளைக்குப் பின் கூடார வகுப்பறைகளுக்குத் திரும்பிய காசா மாணவர்கள்.

போரினால் நீண்டகாலமாக முடக்கப்பட்டிருந்த உயர்கல்விச் செயற்பாடுகளை மீண்டும் தொடங்கும் நோக்கில், தெற்கு...