போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அப்பாவி இளைஞர், சிறுவர்கள் இருப்பதாகவும், அவர்களை கைது செய்து பொலிஸில் புகார் அளித்து அவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்காமல் செய்வது தவறு என்றும் பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
வெலிமடையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டத்தின் முடிவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அதேநேரம், தனது வீடு, மனைவி வீடு மற்றும் தந்தையின் வீட்டிற்கு தீ வைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் போராட்டத்திற்கு வந்த இளைஞர், சிறுவர்களை கைது செய்து சிறையில் அடைப்பதால் எந்த பலனும் ஏற்படாது என்றார்.
அதன்படி, போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை ஏதாவது ஒரு வேலைத்திட்டத்தின் மூலம் சமூகமயப்படுத்த வேண்டும் என்றார்.