ஃபேஸ்புக் விருந்தில் போதைப்பொருள் பாவனை :8 பேர் கைது!

Date:

முகநூலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வெலிகம கடற்கரை விருந்தொன்றில் சோதனை செய்யப்பட்டதில் போதைப்பொருள் மற்றும் மாத்திரைகளை வைத்திருந்த 8 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெலிகம பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (27) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 20 முதல் 30 வயதுக்கு இடைப்பட்ட வெலிகம, ரணல, திஸ்ஸமஹாராமய, கனங்கே, சியாவல மற்றும் பெலியத்த பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள்.

சந்தேகநபர்கள் நேற்று மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

சம்பவம் தொடர்பில் வெலிகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Popular

More like this
Related

இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு?

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் இன்று (6) முதல் அறிவிக்கப்பட உள்ள...

8 ஜனாதிபதி மாளிகைகளுக்கு செலவான 8 கோடி ரூபாய் : வெளியான அறிக்கை

ஜனாதிபதி செயலகத்தின் கடந்த 2024 ஆம் ஆண்டுக்கான பராமரிப்பு பற்றிய செலவுகள்...

பேருவளையில் நடைபெற்ற ஸீரா மாநாடு மற்றும் நூல் வெளியீட்டு விழா

ஸீரா மாநாடு மற்றும் நூல் வெளியீட்டு விழா பேருவளை ZIMICH மண்டபத்தில்...

முடிவுக்கு வரும் இரண்டாண்டு போர்?:எகிப்தில் இஸ்ரேல்-ஹமாஸ் தரப்பு பேச்சுவார்த்தை!

கடந்த 2023ம் ஆண்டு காசாவில் உள்ள பலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் தாக்குதலை...