இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம்: 20 பேர் உயிரிழப்பு!

Date:

இந்தோனேசியாவின் முக்கிய தீவான ஜாவாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் கிட்டத்தட்ட 20 பேர் கொல்லப்பட்டனர்.

அதேநேரம்  குறைந்தது 300 பேர் காயமடைந்துள்ளனர், நிலநடுக்கத்தால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக நகரத்தைச் சேர்ந்த உள்ளூர் அதிகாரி உள்ளூர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

“இப்போதைக்கு எனக்கு கிடைத்த தகவலின்படி, இந்த மருத்துவமனையில் மட்டும் கிட்டத்தட்ட 20 பேர் இறந்துள்ளனர் மற்றும் குறைந்தது 300 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களில் பெரும்பாலோர் கட்டிடங்களின் இடிபாடுகளில் சிக்கியதால் எலும்பு முறிவுகள் ஏற்பட்டன,” என்று Cianjur நிர்வாகத்தின் தலைவர் ஹெர்மன் சுஹர்மன்,   கூறினார்.

இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது. இதற்கு காரணம் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை ஏற்படுத்தக்கூடிய 450 எரிமலைகள் கொண்ட பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் இந்தோனேசியா இருப்பதே ஆகும்.

நிலநடுக்கத்தால் அங்கு மின்சாரம் தடைபட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏராளமான வீடுகள் இருளில் தவித்து வருகின்றனர். பல அடுக்குமாடி கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாகின. ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

Popular

More like this
Related

கிறிஸ்தவ தேவாலயங்கள், முன்னணி ஹோட்டல்கள், சுற்றுலாப் பகுதிகளில் விசேட பாதுகாப்பு!

கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைக் காலத்தில், வழிபாட்டாளர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது

யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா இன்று (24) கோட்டை...

இலங்கையில் டித்வா சூறாவளியால் சுமார் 374,000 தொழிலாளர்கள் பாதிப்பு: சர்வதேச தொழிலாளர் அமைப்பு தகவல்.

இலங்கையில் சுமார் 374,000 தொழிலாளர்கள் டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச தொழிலாளர்...

துருக்கியில் விமான விபத்து: லிபியா நாட்டின் இராணுவ தளபதி உள்ளிட்ட 5 பேர் உயிரிழப்பு.

துருக்கி தலைநகர் அங்காராவில் நிகழ்ந்த பயங்கர விமான விபத்தில், லிபியா நாட்டின்...