இலகுவான ஆடைகளுக்கு மாறிய ஆசிரியர்கள்!

Date:

இன்று நாடளாவிய ரீதியில் பல பாடசாலைகளில் பெண் ஆசிரியர்கள் புடவைக்கு பதிலாக சட்டை, பாவாடை -மேலாடை, பேன்ட், குர்தா போன்ற இலகுவான ஆடைகளை அணிந்து பாடசாலைக்கு வந்துள்ளனர்.

தற்போதைய பொருளாதார பணவீக்கம் காரணமாக புடவைகளின் விலை அதிகரித்துள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நாட்டில் நிலவும் பொருளாதாரப் பிரச்சினைகள் மற்றும் போக்குவரத்துச் சிக்கல்கள் காரணமாக சேலை அணிந்து பணிக்குச் செல்வது சிரமமாக உள்ளதாகவும், அரச ஊழியர்கள் பொருத்தமான ஆடைகளை அணிந்து பணிக்கு சமூகமளிக்கலாம் எனவும் பொது நிர்வாக அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதேவேளை குறித்த அனுமதியின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் வரும்போது தங்களை அன்புடன் கட்டிப்பிடித்ததாகவும் ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பொது நிர்வாக அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையின் பிரகாரம், புடவைக்கு பதிலாக பொருத்தமான ஆடைகளை அணிந்து பாடசாலைகளுக்கு வர அனுமதிக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட ஆசிரியர் சங்கங்கள் கல்வி அமைச்சிடம் கோரிக்கை விடுத்திருந்ததாகவும், மகாசங்கரத்ன அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டின் சில இடங்களில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (15) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...