ஓமானில் ஆள் கடத்தல் மோசடி குறித்து மனுஷவின் விளக்கம்!

Date:

ஆள் கடத்தல் மோசடியில் ஈடுபட்ட ஓமானில் உள்ள இலங்கை தூதரக அதிகாரி ஒருவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டு மீண்டும் இலங்கைக்கு அழைத்து வரப்படுவார் என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார  தெரிவித்தார்.

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இந்த அதிகாரி இலங்கை வந்தவுடன் கைது செய்யப்படுவார் என்றும் அமைச்சர் கூறினார்.

“இந்த விடயத்தை மேலும் விசாரிக்க சில அமைச்சக அதிகாரிகளை காவல்துறையினருடன் நாங்கள் அனுப்பியுள்ளோம்,” என்று அவர் கூறினார்.

ஓமான் மற்றும் டுபாயில் உள்ள பாதுகாப்பு மையங்களில் தங்களுடைய வேலைவாய்ப்பு முகவர்களால் ஏமாற்றப்பட்ட 140க்கும் மேற்பட்ட இலங்கையர்களும் விரைவில் கவனிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் உறுதியளித்தார்.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஜனாதிபதியின் அலுவலகத்தினால் நியமிக்கப்பட்ட குழுவினால் ஆள் கடத்தல் கண்டுபிடிக்கப்பட்டது.

அதன்பின் வெளியான ஊடக அறிக்கைகளும் இந்த ஊழலை வெளிக்கொணர உதவின. இந்த கடத்தலுக்கு பின்னணியில் இருந்த ஒரு பெண் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்,

இலங்கை வீட்டுப் பணியாளர்களை  அனுப்புவதை இடைநிறுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...