சஜித்துடன் இணைந்தாக வெளிவரும் செய்திகள் தவறானவை: சுதர்ஷினி

Date:

ஐக்கிய மக்கள் சக்தியுடன் தாம் கூட்டணியில் இருப்பதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் தவறானவை என நாடாளுமன்ற உறுப்பினர்  சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே  அறிவித்தல் விடுத்துள்ளார்.

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பொதுவாக எதிர்க்கட்சியாக செயற்படுவது குறித்து ஆலோசிப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, பாராளுமன்றத்தில் சபாநாயகர் பட்டியலில் நேரம் ஒதுக்குவது போன்ற விடயங்களை கலந்துரையாடுவதற்காகவே இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியுடன்  கூட்டணி வைக்க முடியாது எனவும் தெரிவித்தார்.

இதேவேளை ஜனாதிபதிக்கு தான் தெளிவாக ஆதரவளிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் செனவிரத்ன ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

பொதுஜன பெரமுனவில் இருந்து சுயேட்சையாக இருந்த 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் கூட்டணியில் இணைந்துகொண்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது தெரிவித்திருந்தார்.

தான் மற்றும் அனுர பிரியதர்சன யாப்பா, டபிள்யூ.டி.ஜே.செனவிரத்ன, கலாநிதி சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே, பியங்கர ஜயரத்ன மற்றும் ஜயரத்ன ஹேரத் ஆகியோர் ஐக்கிய மக்கள் கூட்டணியில் இணைந்துகொண்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையிலேயே, தாம் ஐக்கிய மக்கள் கூட்டணியில் இணையவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...