தேசிய மட்டத்தில் எஸ்.ஏ.இஸ்மத் பாத்திமா விற்கு முதலாமிடம்!

Date:

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் வழிக்காட்டலுடன் பிரதேச செயலகம் மற்றும் மாவட்ட செயலக மட்டத்தில் நடாத்தப்பட்ட இலக்கியப் போட்டித் தொடரில் வெற்றியாளர்களிடையே தேசிய மட்டத்தில் வெற்றிப்பெற்ற வெற்றியாளர்களுக்காக 2022 ஆம் ஆண்டிற்கான தேசிய இலக்கிய விருது வழங்கும் நிகழ்வு 17.11.2022 அன்று வியாழக்கிழமை மு.ப. 10.00 மணிக்கு இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் கௌரவ பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்களின் தலைமையில் கொழும்பு 07, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெற்றது.

இந்நிகழ்வில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த தேசிய இலக்கியப் போட்டிக்காக திறந்த சிறுவர் கதையாக்கப் போட்டியிப் பிரிவில் “பறக்கத் தெரியாத பறவைகள்” எனும் தலைப்பில் சிறுவர் கதை ஆக்கத்தை முன்வைத்து முதலாம் இடத்தைப் பெற்றமைக்காக பேராசிரியர் பிரனீத் அபேசுந்தர  அவர்களது கரங்களால் பஸ்யால மே.மா/மினு/எல்லலமுல்ல ஸாஹிரா முஸ்லிம் வித்தியாலயத்தின் அதிபரும் கவியரசியுமான செய்யது அஹமது இஸ்மத் பாத்திமா அவர்கள்  தேசிய இலக்கிய விருது வழங்கலின் போது தங்கப்பதக்கமும், பத்தாயிரம் ரூபாய் பெறுமதியான காசோலை மற்றும்  சான்றிதழ் என்பன வழங்கி கெளரவிக்கப்பட்டது.

புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சரும் மற்றும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ விதுர விக்கிரமநாயக்க அவர்களும் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளருமான திருமதி தரணி அனோஜா கமகே அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Popular

More like this
Related

அமைதிப்பேச்சு: பாகிஸ்தான் சென்றார் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்: பாகிஸ்தானில் உற்சாக வரவேற்பு.

ஈரான் உடனான அமைதிப் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள பாகிஸ்தான் வந்த அமெரிக்க துணை...

வாகனங்களுக்கான எரிபொருள் QR முறைமை நீக்கம்?

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு, இன்று (11) முதல் எதிர்வரும் 18ஆம் திகதி...

ஆசிரிய சேவையிலிருந்து ஓய்வு பெறும் ஆரம்பப்பிரிவு ஆசிரிய ஆலோசகர் மௌபியா அவர்களுக்கு கஹட்டோவிட்டவில் கௌரவிப்பு!

கம்பஹா மற்றும் மினுவாங்கொட கல்வி வலயங்களில் நீண்டகாலமாக ஆரம்பப்பிரிவு ஆசிரிய ஆலோசகராகப்...

தமிழ்- சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு!

நாட்டின் பொதுமக்களின் மிக முக்கியமான பாரம்பரிய விழாவான சித்திரை புத்தாண்டு காலத்தில்...