‘ரணில் மயானத்தைக் கடந்து செல்லும் போது பயத்தில் பாட்டு பாடும் மனிதர்’

Date:

ரணில் விக்கிரமசிங்க, இரவில் மயானம் வழியாகச் செல்லும்போது பயத்தைப் போக்க பாட்டுப் பாடும் மனிதனைப் போன்றவர் என ஜேவிபி பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, தனக்குக் கிடைத்த பொருத்தமற்ற அதிகாரத்தால் மதிமயங்கி வாயிற்காவலர் மன்னன் ஆனதைப் போல இவர் செய்யும் அயோக்கியத்தனத்தில் மக்களுக்கு அச்சுறுத்தல் அடக்கப்படுகிறதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க அண்மைய மக்கள் எழுச்சியின் மீது வெறுப்புடன் இருப்பதை நாம் அறிவோம். அந்த எழுச்சியால் அவர்களின் வர்க்கம் சவாலுக்கு ஆளாகியிருப்பதை நாம் அறிவோம். அந்தப் போராட்டம் எந்த ஒரு அரசியல் கட்சியோ அல்லது மக்கள் குழுவோ நடத்தும் ஒற்றைப் போராட்டம் அல்ல.

இதன் பின்னர் போராட்டத்திற்கு இடமளிக்க மாட்டோம், போராட்டங்கள் மூலம் அரசாங்கத்தை மாற்ற இடமளிக்க மாட்டோம் என ரணில் விக்கிரமசிங்க கூறுகின்றார், அவசரகால சட்ட விதியை பிரயோகித்து இராணுவத்தை பயன்படுத்தி அடக்குமுறை செய்வோம் என்றகிறார்.

ரணிலைப் போலவே கோட்டாபய ராஜபக்சவும் போராட்டங்களை நிறுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

அப்படியானால், மக்களால் நியமிக்கப்படாத ரணில் விக்கிரமசிங்கவால் மக்கள் போராட்டங்களை நிறுத்த முடியாது எனவும் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...