ஓமன் தூதரகத்தின் முன்னாள் அதிகாரி மறியலில்!

Date:

ஓமானின் இலங்கை தூதரகத்தின் முன்னாள் மூன்றாவது செயலாளர் ஈ.குஷான்  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஓமானின் மஸ்கட்டில் இருந்து விமானம் மூலம் இலங்கை வந்தடைந்த சந்தேக நபர் இன்று (29) அதிகாலை 4.15 மணியளவில் கைது செய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.

சந்தேகநபரை இன்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோதே அவரை எதிர்வரும் டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இலங்கைப் பெண்களை, ஓமானுக்கு ஆட் கடத்தலுக்கு உள்ளாக்கி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டின் பின்னர் ஓமானின் இலங்கை தூதரகத்தின் முன்னாள் மூன்றாவது செயலாளர் ஈ.குஷான் பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்டு நாட்டுக்கு திருப்பியழைக்கப்பட்டிருந்தார்.

அதனைத்தொடர்ந்து, இலங்கை தூதரகத்தின் அதிகாரி குஷானை கைது செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனவெல நேற்று குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு திறந்த பிடியாணை பிறப்பித்தார்.

இந்தநிலையில் இன்று காலை நாடு திரும்பியபோது அவர் குற்றப்புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

Popular

More like this
Related

DPL-2026 Season 5 சாம்பியனாக தெல்தோட்டை டிராகன்ஸ் அணி தெரிவு

ஈதுல் பித்ர் நோன்பு பெருநாளை முன்னிட்டு தெல்தோட்டை, வாலிபர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட...

போலி விமான டிக்கெட்டுகள் தள்ளுபடிகள் குறித்து பொலிஸார் எச்சரிக்கை!

விமான டிக்கெட்டுகளுக்கு மலிவான அல்லது சிறப்புத் தள்ளுபடிகளை வழங்குவதாகக் கூறி, சமூக...

இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்திற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 100 மில். அமெரிக்க டொலர்கள்

இலங்கை நெருக்கடி நிலையிலிருந்து மீண்டு, மிகவும் நெகிழ்ச்சியான பொருளாதாரத்தை நோக்கி நகர்ந்து...

எரிபொருள் QR குறியீடு தொடர்பில் 1000 முறைப்பாடுகள்!

தவறான முறையில் அல்லது பிறருடைய QR குறியீடுகளைப் பயன்படுத்தி எரிபொருள் பெற்றமை...