துபாய் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளுக்கு ஆட் கடத்தல் தொடர்பில் தேடப்பட்டு வந்த மேலும் இரு தரகர்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் (CID) இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களில் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டதாகவும், இரண்டாவது சந்தேக நபர் குருநாகலில் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அவர்களை டிசம்பர் 1 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கடத்தலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பெண் ஒருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று கைது செய்தனர்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றில் மொழிபெயர்ப்பாளராக கடமையாற்றிய பெண்ணை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய பின்னர் பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த கடத்தல் தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவின் மனிதக் கடத்தல், கடத்தல் மற்றும் கடல்சார் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.