சிவனொளிபாத மலை பருவ காலம் ஆரம்பம்!

Date:

எதிர்வரும் பௌர்ணமி தினத்துடன் சிவனொளிபாத மலை பருவ காலம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிவனொளிபாத மலைக்கு பொறுப்பான பீடாதிபதி பெங்கமு தம்மதின்ன தேரர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

எதிர்வரும் 6ஆம் திகதி காலை இரத்தினபுரி கல்பொத்தாவில ரஜமஹா விகாரையில் இருந்து மூன்று வழிகளில் சுவாமிகள் சிவனடி பாத மலைக்கு கொண்டு வர ஏற்பாடு செய்து உள்ளது.

அதன்படி, கல் பொத்தா வலையிலிருந்து பொகவந்தலாவ வழியாகவும், இரத்தினபுரி பெல்மடுள்ள வழியாகவும், இரத்தினபுரி அவிசாவளை, தெகியோவிற்ற, யட்டியந்தோட்டை, கரவனல்ல, கித்துல்கல, கினிக்கத்தேன, வட்டவளை, ஹட்டன், டிக்கோயா, நோர்வூட், மஸ்கெலியா வழியாக நல்லதண்ணி நகரை நோக்கி சுவாமிகள் சென்று அங்கு இருந்து இராணுவ அதிகாரிகள் சுவாமிகளை மலை உச்சிக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்து உள்ளனர்.

அதன் பின்னர் அங்கு சுவர்கள் பிரதிஷ்டை செய்து பின்னர் 7ஆம் திகதி அதிகாலை பிரித் ஓதும் வைபவம் நடைபெறும் அதன் பின்னர் 2022 /2023 சிவனடி பாதமலை பருவகாலம் ஆரம்பிக்கப்பட்டு 2023ஆம் ஆண்டு மே மாதம் வைகாசி விசாகம் பௌர்ணமி தினத்துடன் நிறைவு பெறும்.

இக் காலத்தில் உள்நாட்டு, வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் மற்றும் பாதசாரிகள் சிவனொளிபாத மலைக்கு வந்து தரிசனம் செய்ய சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்துள்ளனர். மேலும், பாதுகாப்பு, மின்சாரம், குடிநீர் வசதி, வர்த்தக நிலையங்கள் சுகாதார வசதிகள் மற்றும் சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்ட நிலையில் உள்ளது.

யாத்திரிகர்கள் தரிசனம் செய்ய வரும்போது பிலாஸ்டிக் போத்தல்கள் பொலித்தீன் (முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது) இவற்றை எடுத்து வர வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் என்றார்.

Popular

More like this
Related

நாட்டின் சில இடங்களில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (15) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...