சுதந்திர தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு விசேட சலுகைகள்!

Date:

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அடுத்த ஆண்டு பெப்ரவரி 4ஆம் திகதி, தேசிய பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்கள் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்களை இலவசமாக பார்வையிடும் வாய்ப்பை பொதுமக்களுக்கு வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகத்துறையின் பதில் அமைச்சர் சாந்த பண்டார இந்த விடயம் தொடர்பில் தெரிவித்தார்.

அத்துடன், பொதுமக்கள் திரைப்படம் பார்க்கும் வாய்ப்பை வழங்கும் வகையில், எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் நுழைவுச்சீட்டுக் கட்டணத்தை 50 வீதத்தால் குறைக்கவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இந்த விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கே இவ்வாறு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில், 50 மி.மீ. இற்கும் அதிக மழை

மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும்...

பொலன்னறுவை மும்மொழி தேசிய பாடசாலை நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்!

பொலன்னறுவை மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய பல்லின  மற்றும் மும்மொழி தேசிய...

பங்களாதேஷில் உச்சக்கட்ட பதற்றம்: டாக்காவில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகர் திருப்பி அழைப்பு!

தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் காரணமாக புது டெல்லியில் உள்ள பங்களாதேஷ் உயர்...

அனைத்து பாடசாலைகளுக்கும் மீண்டும் விடுமுறை!

அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கு இன்று (23) முதல்...