பாகிஸ்தானின் உயர்ஸ்தானிகர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் உமர் ஃபாரூக் புர்கி, அனுராதபுரத்திற்கு விஜயம் செய்துள்ளார்.
இதன்போது அனுராதபுரத்தில் உள்ள பிரசித்து பெற்ற ஸ்ரீ மஹா போதி, அபயகிரிய விகாரைகளின் தலைமை பிக்குகளை மரியாதையுடன் சந்தித்து பேசியதுடன் மிரிசவெட்டிய ஸ்தூபிக்கு சென்றுள்ளார்.
இந்த சந்திப்பின் போது, கலாச்சார கூட்டுறவுகளை மையமாகக் கொண்ட பரஸ்பர இருதரப்பு ஆர்வமுள்ள தலைப்புகள் விரிவாக விவாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.