புடவை அல்லது ஒசரி அல்லாத வேறு ஆடைகளை அணிந்து பணிக்கு சமூகமளிக்கும் ஆசிரியர்களுக்கு எதிராக கல்வி அமைச்சு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பதில் ஊடகத்துறை அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது பாடசாலைச் சூழல் என்பது மாணவர்களின் எதிர்காலத்தில் தொடர்புபட்டுள்ளது அதனால் ஆசிரியர்கள் புடவையிலோ அல்லது ஒசரி புடவையிலே பாடசலைகளுக்கு சமூகமளிக்க வேண்டும் என அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்
மேலும் சட்ட விதிகளுக்கும் கலாசாரத்துக்கு ஏற்றவகையில் பாடசாலை காணப்பட வேண்டும், இதற்கு முரானான கருத்துக்களை வெளியிடும் அரச சார்பற்ற நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படும் அங்கத்தவர்கள் வெளியிடும் கருத்துக்களுக்கு அரசாங்கம் ஒருபோது இடமளிக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்களின் உடையை மாற்றும் முயற்சி தொடர்பில் நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஷவும் கருத்து வெளியிட்டார்.