ரயில் சாரதிகளின் தங்குமிட வசதிகளில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இன்று (15) காலை இயக்கப்படவிருந்த 10க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று பிற்பகல் வரை இந்த தொழில் ரீதியான நடவடிக்கைகளுடன் பெரும் எண்ணிக்கையிலான ரயில்களை ரத்து செய்ய சாரதிகள் சங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.