தென்கிழக்கு பல்கலைகழகத்திற்கு புதிய வேந்தராக ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 5 ஆண்டுகளுக்காக தென்கிழக்கு பல்கலைகழகத்தின் வேந்தராக அவர் நியமிக்கப்பட்டுள்ள இவர் இலங்கையில் சட்டத்துறை சார்ந்த நிபுணராக இருப்பதோடு தேசிய அளவில் மதிக்கப்படுகின்ன்ற ஒருவராகவும் MMDA குழுவின் ஓர் அங்கத்தவராகவும் தொடராக நான்கு தலைமுறைகள் சட்டத்தரணிகள் உருவாக்கிய குடும்ப பின்னணி கொண்டவராகவும் இருப்பதோடு சில வருடங்கள் ஐக்கிய இராச்சியத்தின் கன்சியூலராகவும் பணியாற்றியவராவார்.