2022 பிஃபா உலகக் கிண்ணம்: இஸ்ரேல் டெல் அவிவிலிருந்து டோஹாவுக்கான விசேட விமான சேவைக்கு கட்டார் அனுமதி!

Date:

கட்டாரில் நடைபெறவிருக்கும் உலகக் கோப்பையை முன்னிட்டு , முறையான தூதரக உறவுகள் இல்லாத இஸ்ரேல் மற்றும் கத்தார் இடையே நேரடி விசேட விமானங்கள் இயக்கப்படும் என்று ஃபிஃபா நேற்று தெரிவித்துள்ளது.

அதற்கமைய டெல் அவிவில் உள்ள பென் குரியன் விமான நிலையத்திலிருந்து டோஹாவின் ஹமாத் இன்டர்நேஷனல் வரை செல்லும் விமானங்களில் போட்டி டிக்கெட்டுகள் மற்றும் ஹய்யா ரசிகர் ஐடியை வைத்திருப்பவர்களை அனுமதிக்கும் ஒப்பந்தத்தை FIFA நிர்வாகக் குழு தெரிவித்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம், இஸ்ரேலியர்களும் பாலஸ்தீனியர்களும் ஒன்றாக பயணம் செய்யவும் ஒன்றாக கால்பந்தாட்டத்தை கண்டு களிக்கவும் முடியும் என்று ஃபிஃபா தலைவர் கியானி இன்ஃபான்டினோ தெரிவித்துள்ளார்.

மேலும், இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள மேற்குக்கரை, கிழக்கு ஜெருசலேம் மற்றும் காசா பகுதியில் வசிக்கும் எந்த பாலஸ்தீனியர்களுக்கு இந்த அனுமதி பொருந்தும் என்று அந்த குறித்த அறிக்கை குறிப்பிடவில்லை.

இந்த ஒப்பந்தத்தின்படி, பாலஸ்தீனிய டிக்கெட் வைத்திருப்பவர்களும் ஊடகங்களும் இந்த பட்டய விமானங்களில் எந்தத் தடையும் இல்லாமல் பயணிக்க முடியும்.

ஏனெனில் அவர்களுக்கும் போட்டியை கண்டு களிக்கும் சம உரிமை உள்ளது, என கத்தாரின் போட்டி ஏற்பாட்டாளர், தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

மிச்சிகன் செனட் தேர்தல்: ஹேலி ஸ்டீவன்ஸை வீழ்த்தி அப்துல் எல்-சயீத் வரலாற்று வெற்றி!

அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் நடைபெற்ற அமெரிக்க செனட் சபைக்கான (US Senate)...

குருக்கள்மடம் மனிதப்புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை வரும் 24 ஆம் திகதி..!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப்புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் 24 ஆம்...

2029-க்குள் ‘மெட்ரோ பஸ்’ சேவை 500 ஆக உயர்த்த திட்டம்!

கொழும்புக்கு அப்பால் ஏனைய மாவட்டங்களுக்கும் மெட்ரோ பஸ் சேவையை விரிவாக்கம் செய்து,...

மஹர சிறைச்சாலை சேதங்களை மதிப்பிட 5 பேர் கொண்ட குழு நியமனம்!

மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற பதற்றமான சூழ்நிலையின் போது கைதிகளால் சேதப்படுத்தப்பட்ட சொத்துக்களை...