5,000 ரூபா கொடுப்பனவு குறித்து வெளியான அறிவிப்பு!

Date:

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வழங்கப்படும் 5,000 ரூபா கொடுப்பனவை, குறைக்கவோ அல்லது இரத்து செய்யவோ இல்லை என்று நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நேற்று (21) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

குறித்த பிரதேசங்களில் இதற்காக காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கும் இந்த கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும், இந்த கொடுப்பனவு தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றது.

அத்துடன், ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலப்பகுதிக்கு, இந்த கொடுப்பனவுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்

Popular

More like this
Related

கைதான அர்ச்சுனா எம்.பிக்கு பிணை!

நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (24) கோட்டை பொலிஸில் சரணடைந்த...

அற்புதப் பிறவியாக பிறந்த உத்தமர் (ஈஸா) இயேசுவின் பிறப்பு குறித்து புனித அல்குர்ஆன் கூறுவது என்ன?

ஈஸா (அலை) எனப்படும் இயேசுவின் பிறப்பு, மனித வரலாற்றில் நிகழ்ந்த மிகப்பெரிய...

கிறிஸ்தவ தேவாலயங்கள், முன்னணி ஹோட்டல்கள், சுற்றுலாப் பகுதிகளில் விசேட பாதுகாப்பு!

கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைக் காலத்தில், வழிபாட்டாளர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது

யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா இன்று (24) கோட்டை...