இந்தோனேசியா நாட்டின் பாலியில் ஜி-20 உச்சி மாநாடு நாளை தொடங்குகிறது.
இந்த மாநாட்டில் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, சீனா உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில், இந்தோனேசியாவின் பாலியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன், சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்தித்துப் பேசி வருகிறார்.
மாநாடு நாளை தொடங்கவுள்ள நிலையில் இரு நாட்டு அதிபர்களும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பின் முதல் முறையாக சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்துப் பேசுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜி-20 உச்சி மாநாட்டில் உலக பொருளாதாரம், எரிசக்தி, சுற்றுச்சூழல், டிஜிட்டல் மாற்றம், உக்ரைன் விவகாரம் மற்றும் அதன் தாக்கம் குறித்து மோடி மற்றும் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் முக்கியமாக விவாதிக்க உள்ளனர்.
Biden and Xi met in Bali during the G20 top. "Nothing replaces" face-to-face discussions, says #Biden . Xi says ready for 'sincere' exchange. pic.twitter.com/osBh0bZgv7
— NOËL 🇪🇺 🇺🇦 (@NOELreports) November 14, 2022