அதிரடி ஆட்டத்தால் ஆஜன்டீனாவை கதிகலங்க வைத்து வெற்றியை சுவைத்தது சவூதி அணி!

Date:

அதிரடி ஆட்டத்தால் ஆஜன்டீனாவை கதிகலங்க வைத்து வெற்றியை சுவைத்தது சவூதி அணி. SA-2 , AR-1

கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியில் ஆர்ஜென்டீனாவை 2-1 எனத் தோற்கடித்து அதிர்ச்சி கொடுத்துள்ளது சவூதி அரேபியா.

ஆர்ஜென்டீனா – சவூதி அரேபியா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் இன்று நடைபெற்றது.

முதல் 10 நிமிடத்துக்குள் பெனால்டி மூலமாக கோல் அடித்தார் பிரபல நட்சத்திரம் மெஸ்ஸி.

இதனால் ஆர்ஜென்டீனா 1-0 என முன்னிலை பெற்றது. நான்கு உலகக் கோப்பைப் போட்டிகளிலும் கோலடித்த முதல் ஆர்ஜென்டீனா வீரர் என்கிற பெருமையை மெஸ்ஸி பெற்றார் மெஸ்ஸி. முதல் பாதி முடிவில் 1-0 என முன்னிலையில் இருந்தது ஆர்ஜென்டீனா.

2-வது பாதியில் நிலைமை மாறியது. 48-வது நிமிடத்தில் சவூதி அரேபியா கோலடித்து சமன் செய்தது.

53-வது நிமிடத்தில் யாருமே எதிர்பார்க்காத வகையில் சலீம் அல் டாசாரி கோல் அடித்து சவூதி அரேபியா 2-1 என முன்னிலை பெற உதவினார்.

கடைசியில் கோலடிக்க மிகவும் முயற்சி செய்தது ஆர்ஜென்டீனா. இறுதியில் 2-1 என உலகின் 3-வது சிறந்த அணியான ஆர்ஜென்டினாவை வென்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது தரவரிசையில் 51-வது இடத்தில் உள்ள சவூதி அரேபிய அணி.

Popular

More like this
Related

தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியீடு!

5ம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களைத் தரம்...

கதிர்காம பகுதியில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல: சமூக ஊடகங்களில் பரவி வரும் கருத்துக்கள் தவறானதாகும் – கோட்டாபய

கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல...

இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிய விதத்தை வெளிப்படுத்தி பொலிஸார்

கணேமுல்ல சஞ்சீவ கொலை குற்றச்சாட்டில் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி...