இந்தோனேசியாவின் முக்கிய தீவான ஜாவாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் கிட்டத்தட்ட 20 பேர் கொல்லப்பட்டனர்.
அதேநேரம் குறைந்தது 300 பேர் காயமடைந்துள்ளனர், நிலநடுக்கத்தால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக நகரத்தைச் சேர்ந்த உள்ளூர் அதிகாரி உள்ளூர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
“இப்போதைக்கு எனக்கு கிடைத்த தகவலின்படி, இந்த மருத்துவமனையில் மட்டும் கிட்டத்தட்ட 20 பேர் இறந்துள்ளனர் மற்றும் குறைந்தது 300 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களில் பெரும்பாலோர் கட்டிடங்களின் இடிபாடுகளில் சிக்கியதால் எலும்பு முறிவுகள் ஏற்பட்டன,” என்று Cianjur நிர்வாகத்தின் தலைவர் ஹெர்மன் சுஹர்மன், கூறினார்.
இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது. இதற்கு காரணம் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை ஏற்படுத்தக்கூடிய 450 எரிமலைகள் கொண்ட பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் இந்தோனேசியா இருப்பதே ஆகும்.
நிலநடுக்கத்தால் அங்கு மின்சாரம் தடைபட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏராளமான வீடுகள் இருளில் தவித்து வருகின்றனர். பல அடுக்குமாடி கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாகின. ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.