எல்.ரீ.ரீ.ஈ, ஈஸ்டர் குற்றச்சாட்டுகள் விசாரணைகளை துரிதப்படுத்த தீர்மானம்!

Date:

விடுதலைப் புலிகள் மற்றும் ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் பாதுகாப்புப் படையினரின் தடுப்புக் காவலில்  உள்ளவர்கள் மீதான விசாரணைகளை விரைந்து முடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, குற்றம்சாட்டப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைகளை விரைந்து முடித்து, நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும் நபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, அவர்களுக்கு புனர்வாழ்வளிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வெளிவிவகார அமைச்சு மற்றும் நீதி அமைச்சுக்கு ஜனாதிபதி அலுவலகம் பணிப்புரை விடுத்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனையின் பேரில்,  சாகல ரத்நாயக்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோர் நீதி அமைச்சின் அதிகாரிகளுடன் கடந்த வாரம் கலந்துரையாடி இந்தத் தீர்மானத்தை எட்டியுள்ளனர்.

குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனைகளை பெற்று தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அலுவலகத்தின் பிரதானி சாகல ரத்நாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அதன்படி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது அடுத்த ஆண்டுக்கு முன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசின் மூத்த செய்தித் தொடர்பாளர் ஒருவர் சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்துள்ளார். .

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...