சுதந்திர தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு விசேட சலுகைகள்!

Date:

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அடுத்த ஆண்டு பெப்ரவரி 4ஆம் திகதி, தேசிய பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்கள் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்களை இலவசமாக பார்வையிடும் வாய்ப்பை பொதுமக்களுக்கு வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகத்துறையின் பதில் அமைச்சர் சாந்த பண்டார இந்த விடயம் தொடர்பில் தெரிவித்தார்.

அத்துடன், பொதுமக்கள் திரைப்படம் பார்க்கும் வாய்ப்பை வழங்கும் வகையில், எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் நுழைவுச்சீட்டுக் கட்டணத்தை 50 வீதத்தால் குறைக்கவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இந்த விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கே இவ்வாறு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...