புத்தளத்தில் உள்ள பாடசாலைகளுக்கு பாகிஸ்தான் அரசால் கணினிகள் வழங்கி வைக்கப்பட்டன.
அதற்கமைய பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் உமர் பாரூக் புர்கி இந்த கணினிகளை வழங்கி வைத்தார்.
இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும் இளம் மாணவர்கள் தங்கள் படிப்பில் சிறந்து விளங்கவும் இந்த நன்கொடை வழங்கி வைக்கப்பட்டது.