பொருளாதார நெருக்கடி குறித்து மத்திய வங்கி ஆளுநரின் அறிக்கை!

Date:

பல தசாப்தங்களாக நாட்டை ஆட்சி செய்த அரசாங்கங்களின் செயற்பாடுகளினால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

முன்னைய அரசாங்கங்களில் பெரும்பாலானவை பெரும் வரவு செலவுத் திட்ட இடைவெளியில் நாட்டை ஆட்சி செய்ததாக அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

அதை ஈடுகட்ட நாடு பெருமளவு கடன் வாங்குவதால் அது கட்டுக்கடங்காமல் உயர்ந்துள்ளதாகவும் இதன் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதில் கடுமையான நிதிக் கொள்கை பின்பற்றப்பட வேண்டுமெனவும் மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக வட்டி விகிதத்தை உயர்த்துவது போன்ற முடிவுகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், பொருளாதார நெருக்கடிக்கு காரணமான அரசுகள் மீது அல்ல, நாட்டு மக்கள் மீது நேரடியாக திணிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இது மக்களுக்கு நேரடியான பாதிப்பை ஏற்படுத்தும் என மத்திய வங்கியின் ஆளுநர் கொழும்பில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட போது தெரிவித்தார்.

Popular

More like this
Related

கத்தோலிக்க ஆயர்கள் பேரவையினர் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

கொழும்பு உயர் மறை மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை...

எதிர்வரும் நாட்களில் வானிலையில் மாற்றம்!

எதிர்வரும் நாட்களில் வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய, வடமத்திய மாகாணங்களில் மாலை...

NPP அரசுக்கு சவாலாக மிலிந்த மொரகொட முயற்சியில் புதிய எதிர்க்கட்சிக் கூட்டணி. ஹக்கீம், ரிஷாதும் இணைவு

தேசிய மக்கள் கட்சி அரசாங்கத்துக்கு சவால் விடுக்கும் வகையில் ஒரு பரந்த...