இன்று உலக எய்ட்ஸ் தினம்!

Date:

இன்று உலக எய்ட்ஸ் தினம் (01) அனுசரிக்கப்படுகிறது.

“சமத்துவத்தை காப்பாற்றுங்கள்” என்பது இந்த ஆண்டு உலக எய்ட்ஸ் தினத்தின் கருப்பொருளாகும்.

உலக எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் மக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் பல்வேறு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய பால்வினை நோய்கள் மற்றும் எயிட்ஸ் பிரச்சாரத்தின் சமூக வைத்திய நிபுணர் டொக்டர் ஜனக வேரகொட தெரிவித்தார்.

இலங்கையில் இளைஞர் சமூகத்தினரிடையே எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக நிபுணர் டாக்டர் ஜானக வேரகொட தெரிவித்துள்ளார்.

எய்ட்ஸ் (acquired immunodeficiency syndrome) உலகில் முதன்முறையாக 1981 ஆம் ஆண்டு புதிதாக உருவாகியுள்ள உயிர்கொல்லி நோயாக அறிவிக்கப்பட்டது. அதற்கு பின்பு முதன்முறையாக இந்தியாவில் சென்னையில் உள்ள பாலியல் தொழிலில் ஈடுப்பட கூடிய பெண் ஒருவருக்கு 1986ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதன்முறையாக இது கண்டறியப்பட்டது. இந்த 40 ஆண்டுகளில் எய்ட்ஸ் ஆன்ட்டி ரெட்ரோவைரல் தெரபி (ART) மூலமாக சமாளிக்க கூடிய மற்றும் மருந்துகள் மூலம் இயல்பு வாழ்க்கையை வாழ அனுமதிக்கும் ஒரு நாள்பட்ட நோயாக வளர்ந்துள்ளது.

கிட்டத்தட்ட 41 ஆண்டுகளில் மருத்துவ சிகிச்சை வளர்ச்சியின் உதவியோடு எய்ட்ஸ் பாதிக்கப்பட்டவர்கள் வாழ்நாள் விகிதம் அதிகரித்துள்ளது. குறிப்பாக எய்ட்ஸ் பாதிக்கப்பட்டு 50 வயதுக்கு மேல் வாழும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அதே சமயம் 50 வயதுக்கு மேல் இருப்பவர்களுக்கு எய்ட்ஸ் பாதிக்கும் விகிதமும் 17 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது.

தற்போது பலவிதமான சமூக பொருளாதார காரணங்களால் எய்ட்ஸ் தொற்று நோய்க்கான சிகிச்சை கிடைப்பதில் சமத்துவம் இல்லாமல் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கவலைப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே இந்த ஆண்டு சமத்துவ படுத்துதல் என்ற தலைப்பில் எய்ட்ஸ் தினத்தை கடைப்பிடிக்கிறது.

​இந்தியாவும், எயிட்ஸும்

இந்தியாவில் எய்ட்ஸ் படிப்படியாக கடந்த 20 ஆண்டுகளில் குறைந்து வந்துள்ளது. தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு கழகத்தின் சார்பில் கடந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையில் 2000ஆம் ஆண்டில் மக்கள்தொகையில் 0.55% இருந்த எய்ட்ஸ் பரவல், 2010 இல் 0.32 சதவீதமாகவும், 2021 இல் 0.21 சதவீதமாகவும் குறைந்துள்ளது.

குறிப்பாக இந்த பரவல் கட்டுப்படுத்ததுலில் ஹிமாச்சல் பிரதேசம், தமிழ்நாடு, தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் முன்னிலையில் இருக்கின்றன. தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் 2 மில்லியனுக்கும் அதிகமான எய்ட்ஸ் பாதிக்கப்பட்டவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இந்தியாவை பொறுத்தவரை இங்கு கிடைக்கும் எச்ஐவி சிகிச்சைகள் ,மற்றும் பொது மருத்துவ சேவைகளால் எய்ட்ஸ் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்நாள் அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. குறிப்பாக, எய்ட்ஸ் பாதிக்கப்பட்டு வாழும் வயது முதிர்ந்தோர் இந்தியாவில் அதிகம் உள்ளனர்.
உலக எய்ட்ஸ் தினம் 2022

ஒவ்வொரு ஆண்டும் உலக எய்ட்ஸ் தினத்தை கொண்டாடுவதன் மூலமாக உலகம் முழுவதும் உள்ள எய்ட்ஸ் பாதிக்கப் பட்டவர்களுக்கான உரிமைகள், மருத்துவ சிகிச்சை, அடிப்படை தேவைகள் ஆகியவற்றை பாதுகாப்பது. மேலும், உலக அளவில் எய்ட்ஸ் பரவலை கட்டுப்படுத்தும் திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்வது போன்ற செயல்களை செய்து வருகிறது உலக சுகாதார அமைப்பு.

அதன்படி கடந்த காலங்களில் எய்ட்ஸ் பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவ சிகிச்சை கிடைக்கும் விகிதம் , அவர்களுக்கான அடிப்படை மனித உரிமைகள் மற்றும் தேவைகள் மறுக்கப்படுதல், அவர்களை தனிமைப்படுத்துதல் போன்ற பலவிதமான பாகுபாடுகள் அதிகரித்துள்ளன.

எனவே, உலக நாடுகள் பாகுபாடின்றி எய்ட்ஸ் பாதிக்கப்பட்டவர்களை நடத்தவும், அவர்களுக்கான உரிமைகள் மற்றும் மருத்துவ சிகிச்சைகளை வழங்கவும் வேண்டுமென உலக சுகாதார நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. குறிப்பாக ஓரினசேர்க்கையாளர்கள், புலம்பெயர்ந்து வரும் அகதிகள் உள்ளிட்ட சிறுபாண்மையானவர்களுக்கு இவை கிடைப்பதை உறுதி படுத்த வேண்டும் என்றும் கேட்டு கொண்டுள்ளது.

​நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

உங்களுக்கோ அல்லது உங்களை சார்ந்தவர்களுக்கோ எய்ட்ஸ் சார்ந்த அறிகுறிகள் தெரிந்தால் பயப்படாமல் மருத்துவ சிகிச்சையை நாடுங்கள். முறையான மருத்துவ சிகிச்சையின் மூலமாக நீண்ட நாட்களுக்கு சாதாரண வாழ்நாள் அளவிலேயே நீங்கள் வாழமுடியும்.

அதே போல், சமூகத்திலிருந்து தங்களை துண்டித்து கொள்வதோ அல்லது பாதிக்கப்பட்டவரை ஒதுக்கி வைக்காமல் மனித உரிமைகளோடு அவர்களை நடத்துதல் வேண்டும். மனஅழுத்தம் அதிகமாகும்போது தயங்காமல் மருத்துவ உதவியை நாடுங்கள். ஆரோக்கியமான உணவுகள், தொடர் சிகிச்சை உங்களுக்கு நீண்ட ஆயுளை தரும்.

Popular

More like this
Related

“1win Официальный Сайт Букмекерской Конторы Для Ставок На Спорт

1win Ставки На Спорт И Онлайн Казино Бонус 500%ContentIn...

1win Ставки На Спорт и Онлайн Казино Бонус 500%”

1win официальный Сайт Букмекерской Конторы Ставки ОнлайнContentОбзор На что...

Пинко Казино Pinko Casino Актуальное Зеркало Играть На Реальные деньги В Пинко Casino

Pinco Пинко Казино Регистрация И Доступ ко Рабочим Зеркалам"ContentПромо...

“кент Казино Играть и Официальном Сайте Kent Casino

Кент Казино Официальный Сайт Зеркало Kent Casino со БонусамиContentособенности...