இன்று முதல் ஒரு இலட்சம் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்க எதிர்பார்க்கப்படுவதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
முன்பதிவு செய்யப்பட்ட எரிவாயு கப்பல்கள் நாட்டிற்கு வருவதில் தாமதம் ஏற்பட்டதால், சந்தைக்கு எரிவாயுவை வெளியிடுவது மட்டுப்படுத்தப்பட்டதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது
கோரப்பட்ட எரிவாயு கப்பல்கள் தற்போது நாட்டை வந்தடைந்துள்ளது. இதன்படி, பண்டிகைக் காலங்களில் எரிவாயுவை கொள்வனவு செய்வதற்குத் தேவையான அனைத்து வசதிகளும் நுகர்வோருக்கு வழங்கப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கிட்டத்தட்ட ஒரு இலட்சம் எரிவாயு சிலிண்டர்களை இன்று காலை சந்தைக்கு விநியோகிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.