பாராளுமன்றத்தில் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கு மேலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று, டிசம்பர் 1 ஆம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர்,
டொனமூர் அரசியலமைப்பின் கீழ் 1931 ஆம் ஆண்டு இலங்கையின் அரச சபையின் முதலாவது பெண் உறுப்பினர் தெரிவு செய்யப்பட்டார்.
1931 இல் அரச சபையில் பெண்களின் பிரதிநிதித்துவம் 2% ஆக இருந்தது, கடந்த 91 ஆண்டுகளில் அது 5% ஆக மட்டுமே அதிகரித்துள்ளது.
மேலும், சனத்தொகையில் பெண்களே பெரும்பான்மையாக உள்ள போதிலும் தற்போது 12 பெண் உறுப்பினர்கள் மாத்திரமே பாராளுமன்றத்தில் இருப்பது துரதிஷ்டவசமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கான புதிய சட்டத்தை உருவாக்குமாறும் ஜனாதிபதி விக்கிரமசிங்க பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவிடம் கேட்டுக்கொண்டார்.
மேலும், நாடாளுமன்றத்தில் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பட்டியல் முறையொன்றை அமுல்படுத்துமாறும் ஜனாதிபதி பரிந்துரைத்துள்ளார்.