அமெரிக்காவின் ‘ஹார்ட் டு ஹார்ட்’ இன்டர்நேஷனல் அமைப்பு சுமார் 7.2 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மருந்துப் பொருட்களை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.
இதன் இலங்கைப் பெறுமதி சுமார் இலங்கைக்கு 2.7 பில்லியன் ரூபாவாகும். இந்த அமைப்பு இலங்கைக்கு நன்கொடை வழங்குவது இது மூன்றாவது முறையாகும்.
உயர் இரத்த அழுத்தம், இதய நோய், மனநோய் மற்றும் குறைந்த பொட்டாசியம் அளவைக் குணப்படுத்தும் மருந்துகள் இதில் அடங்கியுள்ளன.
இந்த உதவியின் மூலம் ‘ஹார்ட் டு ஹார்ட்’ இன்டர்நேஷனல் அமைப்பு இதுவரை 19.91 மில்லியன் அமெரிக்க டொலர் (7.4 பில்லியன் இலங்கை ரூபா) பெறுமதியான மருத்துவ உதவிகளை இலங்கைக்கு வழங்கியுள்ளது என அமெரிக்காவில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.