எதிர்வரும் 8ஆம் திகதி இறுதி வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பு: நாடாளுமன்றத்துக்கு பலத்த பாதுகாப்பு!

Date:

இறுதி வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பு நடைபெறும் 8ஆம் திகதி பாராளுமன்றத்தைச் சுற்றி தொடர் போராட்டங்களை நடத்துவதற்கு வெகுஜன அமைப்புகளின் ஒன்றியம் உள்ளிட்ட அரசியல் அமைப்புக்கள் உள்ளகத் தயார்படுத்துவது குறித்து பாதுகாப்புத் தலைவர்கள் அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளனர்.

வரவு செலவுத் திட்ட இறுதி விவாதத்திற்கு வரும் மக்கள் பிரதிநிதிகளை வழி மறிப்பது, அழுத்தம் கொடுப்பது உள்ளிட்ட பல திட்டங்களில் உளவுத்துறையினர் ஈடுபட்டு வருவதும் இதன் மூலம் தெரியவந்துள்ளது.

இதன்படி, நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிப்பவர்களை கைது செய்யுமாறு சபாநாயகரின் தலையீட்டின் ஊடாக நீதிமன்ற உத்தரவைப் பெற்றுக்கொள்ளுமாறு மேல் மாகாணங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படும் பட்சத்தில் கைது செய்யப்படும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு பிணை வழங்கப்படுவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பது குறித்தும் பொலிஸ் மா அதிபர் தலைமையிலான பாதுகாப்புத் தலைவர்கள் கலந்துரையாடியுள்ளனர்.

எதிர்வரும் 8ஆம் திகதி வான்கார்ட் சோசலிசக் கட்சி நாடு தழுவிய ரீதியில் மாவட்ட மட்டத்தில் போராட்டங்களை நடத்துவதற்கு தயாராகி வருவதாக பொலிஸ் புலனாய்வுப் பிரிவுகள் தெரிவித்துள்ளன. பொருட்களின் விலை குறைப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து தொடர் போராட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதற்கிடையில், நாடாளுமன்றத்தை சுற்றிலும் தொடர் போராட்டங்கள் நடத்தப்படவுள்ள நிலையில், எதிர்வரும் 8ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பொருட்களின் விலையைக் குறைத்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் எதிர்வரும் 9ஆம் திகதி கோட்டை ரயில் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது. இதேவேளை நாடு முழுவதிலும் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு முன்பாக போராட்டம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Popular

More like this
Related

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...